மூச்சு திணறல்
அவ்வப்போது வரும் மூச்சுத் திணறல் பற்றி கவலைப்பட எதுவுமில்லை, ஆனால் சில நேரங்களில் அது தீவிரமானதாக இருக்கலாம், மேலும் நீங்கள் மருத்துவ உதவியைப் பெற வேண்டி வரலாம் .
உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியவை
நீங்கள் மிகவும் சுவாசிக்க சிரமப்படுகிறீர்கள் அல்லது உங்களுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்படுவது , கூடவே
- உங்கள் மார்பு இறுக்கமாக அல்லது கனமாக உணர்கிறீர்கள்
- உங்கள் கைகள், முதுகு, கழுத்து மற்றும் தாடை வரை பரவும் வலி
- திடீரென ஏற்படும் வலி அதிகூடிய வலி
இது உங்களுக்கு மாரடைப்பு அல்லது உங்கள் நுரையீரல் சிக்கலாக இருக்கலாம். உங்களுக்கு உடனடி சிகிச்சை தேவை என்பதால் மருத்துவமனைக்கு செல்லவும்
அவசரமற்ற பொது மருத்துவர் ஆலோசனை வேண்டியவை
உங்களுக்கு மூச்சுத் திணறல்,
- மாதத்திற்கும் மேலாக நீடிப்பது
- எந்தவொரு செயலில் போதும் அது மோசமாகிறது
- படுத்துக் கொள்ளும்போது அது மோசமாகிறது
அல்லது மூச்சுத்திணறலுடன்
- 3 வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட இருமல்
- கணுக்கால் வீக்கம்
உங்கள் அறிகுறி தீவிரமானதில்லை என்பதை உறுதிப்படுத்த மருத்துவ ஆலோசனையைப் பெறுவது முக்கியம்.
மூச்சுத் திணறலுக்கான காரணங்கள்
மூச்சுத் திணறல் பல்வேறு காரணங்களைக் கொண்டுள்ளது.பொதுவாக இது இருதயம் அல்லது நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகளாக இருக்கின்றன
நுரையீரல் நோய்கள்
- ஆஸ்துமா : பெரும்பாலும் தூண்டும் காரணிகளுடன்(தூசு,ஒவ்வாமை ,வைருஸ் தோற்று ) மூச்சுத்திணறல் உருவாகும் , மூச்சிழுப்பு (wheeze) , இருமல்
- நுரையீரல் தொற்று :இருமல் , காய்ச்சல்
- நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் COPD : அடிக்கடி இருமல், நீண்டநாள் புகைபிடிப்பவர்கள்,
- நுரையீரலைச் சுற்றி காற்று கசிவு (Pneumothorax) :சுவாசிக்கும் பொழுது அதிகமாகும் நெஞ்சு வலி , ஆபத்து காரணிகள்- உயரமான மெல்லிய உடல் , புகைபிடிப்பவர்கள் , ஏற்கனவே நுரையீரல் நோய் உள்ளவர்கள் (COPD,Asthma,Emphysema )
- நுரையீரல் தமனி அடைப்பு (Pulmonary Embolism): நெஞ்சு வலி சுவாசிக்கும் பொழுது அதிகமாகும், படபடப்பு, ஆபத்து காரணிகள்- நீண்ட நாள் படுக்கை, புற்று நோய்,ஹோர்மொன் சிகிச்சை,சமீத்தய அறுவைசிகிச்சை
இருதய நோய்கள்
- இதய தமனி நோய்/இருதய நோய்கள் :நெஞ்சை அழுத்துவது/கணமான வலி,ஆபத்துகாரணிகள்-வயது>45, இரத்தழுத்தம், சக்கரைநோய்,புகைபிடித்தல், அதிகரத்தகொழுப்பு, குடும்பத்தில் மாரடைப்பு
- Aorta ரத்த நாள பிளவு (Aortic Dissection): திடீர் என ஏற்படும் நெஞ்சு/முதுகு பகுதியில் ஏற்படும் கிழித்தல் போன்ற வலி,மயக்கம்,தலைசுற்று
- இதய செயலிழப்பு (Heart Failure -நுரையீரலைச் சுற்றி திரவம் குவிதல்):படுத்துக் கொள்ளும்போது அதிகமாகும் மூச்சு திணறல் ,கணுக்கால் வீக்கம் (இது சிறுநீரக , கல்லீரல் செயலிழப்புபினாலும் உருவாகலாம் )
இரத்த நோய்
- இரத்த சோகை : தலை சுற்று , படபடப்பு
மற்றவை
- அதிக எடை
- புகைபிடித்தல் ,
- panic attack.
உங்கள் மூச்சுத் திணறலுக்கான காரணத்தை சுயமாகக் கண்டறிய முயற்சிக்காதீர்கள் – எப்போதும் ஒரு ஒரு மருத்துவர் ஆலோசனை பெறுங்கள்
Leave a comment