வயிற்று வலி என்பது நாம் அனவைரும் கடந்து வரும் ஒரு வலி தான். ஆனாலும், இதற்க்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இது தற்காலிக நோய்கள் அல்லது கடுமையான நோய்களுடைய அறிகுறியாக இருக்கலாம். சில நேரங்களில் அது ஒரு தீவிர மருத்துவ நிலைக்கும் உள்ளாக்கலாம்.
பொதுவாக காரணத்தை கண்டறிய
- எந்த பகுதியில் வலி ஏற்படுகின்றது
- அதனுடன் சேர்ந்த பிற அறிகுறிகள் / வலியின் தன்மை
எந்த பகுதியில் வலி ஏற்படுகின்றது என்பதை கண்டறிய , உங்கள் வயிற்றை நான்கு கோடுகள் கொண்டு இவ்வாறு பிரிக்கலாம். மேல் இருந்து இரண்டு கோடுகளும், வலம் இருந்து இடம் இரு கோடுகளும் வரையலாம்.
இப்போது உங்கள் உடல் உறுப்புக்கள் உள்ள இடத்தையும், அதற்க்கான பொதுவான நோய்களையும் பார்ப்போம்.
வலது மேல் பகுதி
இந்த பகுதியில் இருப்பது: பித்தப்பை, சிறுகுடலின் முதற்கூறு, கல்லீரல்.
வலி காரணிகள் : பித்தப்பை கல் அல்லது அதில் ஏற்படும் infection, இரைப்பைக்குடல்புண் மற்றும் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் .
மேல் நடுப்பகுதி
இந்த பகுதியில் இருப்பது: இரைப்பை, கணையம், சிறுகுடலின் முதற்கூறு ,கணையம் மற்றும் கல்லீரலின் ஒரு பகுதி.
வலி காரணிகள் : இரைப்பை அழற்சி , இரைப்பைக் குடல் புண்,கணையவீக்கம்
இடது மேல் பகுதி
இந்த பகுதியில் இருப்பது: இரைப்பை, கணையம் மற்றும் மண்ணீரல்
வலி காரணிகள் : இரைப்பை அழற்சி அல்லது புண், கணையவீக்கம், சில வேளைகளில் மண்ணீரல் சம்பந்தமான நோய்கள்
வலது கீழ் பகுதி
இந்த பகுதியில் இருப்பது : குடல்வால் , பெருங்குடலின் பகுதி, சிறுநீர்க் குழாய் , கருமுட்டை மற்றும் கருமுட்டை குழாய்
வலி காரணிகள் : குடல்வால் வீக்கம் (appendicitis), சிறுநீர் தொற்று, கருமுட்டை மற்றும் கருமுட்டை குழாய் சம்பந்தமான வலிகள்
இடது கீழ் பகுதி
இந்த பகுதியில் இருப்பது: பெரும்குடலின் பகுதி, சிறுநீர்க் குழாய், கருமுட்டை மற்றும் கருமுட்டை குழாய்
வலி காரணிகள் : கிளைக்குழாய் அழற்சி (diverticulitis) , சிறுநீர் தொற்று, கருமுட்டை மற்றும் கருமுட்டை குழாய் சம்பந்தமான வலிகள்.
கீழ் நடுபகுதி
இந்த பகுதியில் இருப்பது: சிறுநீர்ப்பை, பெண்களுக்கு கர்ப்பப்பை மற்றும் ஆண்களுக்கு முன்னிலைச் சுரப்பி ( prostate)
வலி காரணிகள் : சிறுநீர் தொற்று மற்றும் பெண்களுக்கு கர்ப்பபை சம்பந்தமான நோய்கள் மற்றும் இடுப்பு அழற்சி நோய்கள்.
வலது மற்றும் இடது பின் பகுதி
இதில் இரு பகுதியின் பின்புறத்தில் இருப்பது: சிறுநீரகம் மற்றும் குடல் பகுதி.
வலி காரணிகள் : சிறுநீரகக்கல் மற்றும் சிறுநீரக தொற்று நோய்
வயிற்றின் நடுப்பகுதி
இந்த பகுதியிலிருப்பது: பெரும்பாலும் குடல் பகுதி.
வலி காரணிகள் : இது எல்லா உறுப்புகளுக்கும் அருகாமையில் இருப்பதால், இதில் ஏற்படும் வலிக்கு காரணம் கண்டறிவது கடினம். உதாரணமாக, குடல்வால் வீக்கம் ஆரம்ப நிலையில் வயிற்றின் நடுப்பகுதியுலையே ஆரம்பம் ஆகும்.
எவ்வாறு, பிற அறிகுறிகளை வைத்துக்கண்டறிவது?
- வலியின் தன்மை:
- எடுத்துகாட்டாக திடீர் என்று ஏற்படும் கூர்மையான வலி, சிறுநீரக்கல் அல்லது பித்தபைகல் போன்ற காரணங்களாக இருக்கலாம்.
- எரிச்சல் போன்ற வலியாக இருப்பின் இரைப்பை சம்பந்தமான பிரச்சனைகளாக இருக்கலாம்.
- விட்டு விட்டு முறுக்குவது போல் வலித்தால் குடல் சம்பந்தமான பிரச்சனையாக இருக்காலாம்.
- சாப்பாடு சம்பந்தமாக வலி ஏற்படுதல்:
- மேல் வயிற்றில் சாப்பிட்டவுடன் வலி அதிகரித்தால் இரைப்பை புண்ணாக இருக்கலாம்.
- கொழுப்புணவு சாப்பிட்ட பின் வலி ஏற்படுமானால் பித்தப்பை சம்பந்தமான வலிகளாக இருக்கலாம்.
- சாப்பிட்ட பின் வலி போகுமானால் சிறுகுடலின் முதற்கூற்று பகுதியில் புண்ணாக இருக்கலாம்
- வயிற்று போக்கு அல்லது மலசிக்கலோடு ஏற்படும் வலி, குடல் சம்பந்தமான பிரச்சனைகளாக இருக்காலாம்.
- சிறுநீர் சம்பந்தமான அறிகுறிகள்: எடுத்துகாட்டாக அடிக்கடி சிறுநீர் கழித்தல் அத்துடன் சிறுநீர் கழிக்கும் போது வலி இருப்பின், சிறுநீரக சம்பந்தமான நோய்களாக இருக்கலாம்.
- பாலுறுப்பு சம்பந்தமாக பிரச்சனைகள் : பெண் பாலுறுப்பிருந்து இரத்தம் அல்லது ஏதேனும் திரவம் வெளியேறினால், மற்றும் மாதவிடாய் சம்பந்தமாக வலி இருந்தால், எடுத்துகாட்டாக, மாதவிடாய் நடுவில், மாதவிடாயின் பொழுது அல்லது தள்ளி போன பின்பு வலி ஏற்படுமானால், இவை பெண் பாலுறுப்பு சம்பந்தமாக பிரச்சனைகாளாக இருக்கலாம்.
- காச்சலோடு வலி ஏற்ப்படின், வயிற்றுப்பகுதியில் infection க்கான காரணமாக இருக்கலாம்.
உயிருக்கு அச்சுறுத்தல் தரும் சில வயிற்று வலிகள்
- வயிற்று பகுதியில் ஏற்படும் அழற்சி
- ரத்த கசிவு
- குடல் இயக்கத்தில் அடைப்பு
- குடல் குருதியோட்டக்குறைபாடு
வயிற்று பகுதியில் ஏற்படும் அழற்சி
அழற்சி போன்ற நோய்களாக இருப்பின், வயிற்று வலி, நீடித்து அதிகமாகுதல், அடிக்கடி வாந்தி எடுத்தல், பசியின்மை, காச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் . இதற்க்கு உதாரணமாக குடல்வால் அழற்சி, பித்தப்பை அழற்சி, குடல் அழற்சி போன்ற நோய்களாக இருக்கலாம்.
இரத்த கசிவு
இரத்த கசிவுக்கான அறிகுறிகளாக வலியுடன் மயக்கம் அல்லது தலைச்சுற்று போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்
இதற்க்கு உதாரணமாக
- வயிற்றில் அல்லது குடலில் ஏற்படும் ரத்த கசிவு : இதற்க்கு காப்பி coffee நிறத்தில் வாந்தி, மலத்தில் இளம் சிவப்பில் அல்லது கறுப்பு நிறத்தில் ரத்தம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் .
- Aorta ரத்த நாள பிளவு : வயதானவர்களுக்கு பின் முதுகில் திடீரென ஏற்படும் தீவிர வலியுடன் மயக்கம் அல்லது தலைச்சுற்று ஏற்படும் .
- கரு அழிந்து போதல்: இளம் பெண்களுக்கு அடிவயிற்றில் வலியுடன் மயக்கம் அல்லது தலைச்சுற்று ஏற்படின், இது கற்பப்பை வெளியே உருவான கரு அழிந்து போனதுக்கான அறிகுயாக இருக்கலாம்
குடல் இயக்கத்தில் அடைப்பு : வயுற்று பகுதி பெரிதாகி, அடிக்கடி வாந்தி எடுத்தல் , நீண்ட நாள் மலம் கழிக்காமல் இருப்பது போன்ற அறிகுறிகள் ஏற்ப்படலாம்.
குடல் குருதியோட்டக்குறைபாடு : உதாரணமாக mesentric (மேசென்றிக்) தமனி அடைப்பு அல்லது குடல் முறுக்கம் போன்ற நோய்களால் திடீரென ஏற்படும் வலி, நீடித்து அதிகமாகும் கூடவே அடிக்கடி வாந்தி, போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம்
விதை முறுக்கு : விதைக்கு செல்லும் இரத்த நாளத்தில் முறுக்கு ஏற்ப்படுவாதால் இரத்த ஓட்டம் தடைப்படுகின்றது இதானால் விதை இறக்க நேரிடும் எனவே திடீரென விதையில் தீவிர வலி ஏற்பட்டால்,காலம் தாமதிக்காது உடனடி மருத்துவமைக்கு செல்ல வேண்டும்.
மாரடைப்பு: சிலவேளைகளில் வயதானவர்களுக்கும், சக்கரை வியாதி உள்ளவர்களுக்கும் மாரடைப்புக்கான வலி, மேல் வயிற்றில் ஏற்படாலாம்
இவ்வாறு
- சாதாரணமான வலி நீடித்து அதிகமாகுதல் அல்லது திடீரென ஏற்படும் தீவிர வலியுடன் ,
- பசியின்மை
- அடிக்கடி வாந்தி எடுத்தல் அல்லது காப்பிநிறத்தில் வாந்தி,
- இளம் சிவப்பில் அல்லது கருப்பு நிறத்தில் மலம்,
- வலியுடன் மயக்கம்.
- காய்ச்சல்
- மற்றும் , நீண்ட நாள் மலம் கழிக்காமை
போன்ற அறிகுறிகள் இருப்பின் தாமதிக்காது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்
காரணம் கண்டறிய எந்த மாதிரி பரிசோதனைகள் செய்யலாம் ?
- Endoscopy – உணவு குழாய், இரைப்பை சம்பந்தமானான பிரச்சனைகளை நேரடியாக தெரிந்து கொள்ள உதவும்.
- Ultrasound– பித்தப்பை கல்,கல்லீரல் மற்றும் அடிவயிற்றில் ஏற்படும் வலிக்கான காரணத்தை கண்டறிய உதவும்.
- CT Scan– வயிற்றில் உள்ள உறுப்புகள், ரத்த குழாய் மற்றும் குடல் சம்பதமான பிரச்சனைகளை தெரிந்து கொள்ள உதவும்.
- Colonoscopy- கீழ் குடலில் ஏற்படும் பிரச்சனைய நேரடியாக தெரிந்து கொள்ள இது உதவும்.
- X -ray – உடனயாக சில காரணத்தை கண்டறிய உதவும். எடுத்துகாட்டாக குடலில் ஏற்படும் அடைப்பு மற்றும் துளைப்பு. எனினும் உறுதிப்படுத்த, மேலும் சில scan செய்யப்படும்.
- சிறுநீரில்– infection மற்றும் கருத்தரிப்பு பரிசோதனை
- இரத்த பரிசோதனை:Full Blood Count, Liver function test, Kidney Function,Amylase
Leave a comment