ஒவ்வாமை என்பது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு, ஒரு வெளி பொருள் உடலின் மீது படும்போது அளவுக்கு அதிகமாக வினை புரிதல் ஆகும். ஆனால் ஒவ்வாமை காரணமாக பலருக்கு எந்த எதிர் வினையும் ஏற்படுவது இல்லை. அலர்ஜியின் தீவிரத்தன்மை ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். இதனால் சாதாரண எரிச்சல் முதல் உயிரை அச்சுறுத்தும் மருத்துவ அவசர நிலையான அனபிளாக்ஸிஸ் நோய் வரை ஏற்படலாம். பெரும்பாலான ஒவ்வாமைகள் குணப்படுத்த முடியாதவை, இருப்பினும் ஒவ்வாமையின் அறிகுறிகளை நிவர்த்தி செய்ய உதவும் பல சிகிச்சைகள் உள்ளன.
ஒவ்வாமை ஊக்கிகளின் வகைகள்:
காற்று வழியே பரவும் சாதாரண ஒவ்வாமை ஊக்கிகள்
தூசியிலுள்ள நுண்ணுயிர்கள். இந்த நுண்ணுயிர்கள் உங்கள் வீட்டிலுள்ள வெப்பமான, ஈரலிப்பான, தூசியுள்ள பகுதிகளில் வாழும். அவை இறந்த தோல் உயிரணுக்களை உண்ணும். அவற்றின் கழிவுகள் ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவுக்கு மிகப் பெரிய காரணமாகும்.
- பூக்கள் மற்றும் வேறு செடிகளிலிருந்து மகரந்தம்
- பூஞ்சனம் (மோல்ட்)
- செல்லப்பிராணிகளின் செதில்கள் மற்றும் இறந்த தோல் உயிரணுக்கள்
- கரப்பான் பூச்சிகள்
சாதாரண உணவு ஒவ்வாமை ஊக்கிகள்
- நிலக்கடலை
- ஹேஸல் நட்ஸ், வால்நட்ஸ், ஆல்மன்ட்ஸ் மற்றும் கஜு போன்ற மரங்களில் விளையும் கொட்டைகள்
- முட்டைகள்
- பசுப்பால்
- வெளியோடுடைய மீன்
ஒவ்வாமைகளின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்
ஒவ்வாமை எதிர்விளைவுகளின் கடுமை பிள்ளைக்குப் பிள்ளை வேறுபடலாம். நீங்கள் வசிக்கும் இடமும் ஒவ்வாமையின் வகை மற்றும் கடுமையை வேறுபடலாம்.
ஒவ்வாமையின் அறிகுறிகள் வேறுபடும், ஆனால் அவை பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:
- சுவாசித்தலில் பிரச்சினைகள்
- கண்களில் எரிச்சல், கண்ணீர் வடிதல், அல்லது அரிப்பு
- விழிவெண்படல அழற்சி(கண்கள் சிவத்தல், கண்களில் வீக்கம்)
- இருமல்
- மூக்கு, வாய், தொண்டை, தோல், அல்லது வேறு ஏதாவது பகுதியில் அரிப்பு
- மூக்கு ஒழுகுதல்
- தோலரிப்பு (மேடாயிருத்தல், சிவந்திருத்தல், அரிப்புடன் வீங்கியிருத்தல்)
- தோற் படைகள்
- வாந்தி
- வயிற்றுவலி மற்றும் வயிற்றோட்டம்
கடும் ஒவ்வாமை (அன்னாஃபிலெக்ஸிஸ்)
சில ஒவ்வாமைகள் மிகவும் கடுமையானதாகவும் உயிரை அச்சுறுத்தக்கூடியதாகவும் இருக்கலாம்.
உங்கள் பிள்ளைக்குப் பின்வருவனவற்றுள் ஏதாவது இருந்தால், உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு அவனைக் கொண்டு செல்லவும்:
- சுவாசிப்பதில் கஷ்டம்
- வீக்கம், முக்கியமாக முகம், தொண்டை, உதடுகள், மற்றும் நாக்கு
- இரத்த அழுத்தத்தில் விரைவான வீழ்ச்சி
- மோசமான தலைச் சுற்று
- நினைவிழத்தல்
- தோலரிப்பு
- தொண்டையில் இறுக்கம்
- குரல் அடைப்பு
- லேசான தலைச் சுற்று
எபினெஃப்ரின் என்றழைக்கப்படும் ஒரு மருந்தின் மூலம் அளிக்கப்படும் விரைவான சிகிச்சை, இந்த பிரச்சினைகளை நிறுத்தி உங்கள் பிள்ளையின் உயிரைக் காப்பாற்றும். இந்த மருந்து சாதாரணமாக எபி-பென் என அறியப்பட்டுள்ளது. கடும் ஒவ்வாமை ஒரு அவசர மருத்துவ நிலை. உங்கள் பிள்ளை உடனே மருத்துவமனைக்குச் செல்லவேண்டும்.
சிகிச்சை
- முடிந்தளவு அதிகமாக, உங்கள் பிள்ளை ஒவ்வாமையூக்கிகளுடன் தொடர்பு கொள்வதைக் குறைக்கவும்.
- காற்றில் மிதக்கும் ஒவ்வாமையூக்கிகளுடன் உங்கள் பிள்ளையின் தொடர்பைக் குறைத்துக் கொள்வதற்கான சில தெரிவுகள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:
- வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்க்க வேண்டாம். அல்லது உங்களுக்கு ஒரு செல்லப் பிராணியிருந்தால், அதைப் பிள்ளையின் அறைக்கு வெளியே வைத்துக்கொள்ளவும் மற்றும் அதை ஒழுங்காகக் குளிப்பாட்டவும்.
- கம்பளங்கள் மற்றும் தரை விரிப்புகளை வீட்டிலிருந்து, விசேஷமாக உங்கள் பிள்ளையின் படுக்கையறையிலிருந்து வெளியேற்றவும். கம்பளங்களைப் போல, கடும் தரை மேற்பரப்புகள் தூசியை அதிகளவில் சேமித்துவைப்பதில்லை.
- வீட்டில் ஈரப்பதனிலையைக் குறைக்கவும்.
- படுக்கை விரிப்புகளை வெந்நீரில் கழுவவும் இது தூசியிலுள்ள நுண்ணுயிர்களைக் குறைக்க உதவும்.
- உச்ச நிலை பருவகாலங்களில் ஜன்னல்களை மூடி வைத்திருப்பதன்மூலம் வெளியிலிருந்து மகரந்தப் பொடிகள் வீட்டுக்குள் வருவதைக் கட்டும் படுத்தவும்.
- சிறிய துகள்களை வடிகட்டக்கூடிய வடிகட்டியுள்ள ஏர்கண்டிஷனரை உபயோகிக்கவும்.
- தூசியைச் சேமித்து வைக்கக்கூடிய பொருட்களை வீட்டிலிருந்து அகற்றிவிடவும். இவை பாரமான திரைகள் அல்லது பழைய, அசுத்தமான தளபாடங்கள் என்பனவற்றை உட்படுத்தும்.
- உங்கள் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்யவும்.
- உங்கள் பிள்ளை தூசியிலுள்ள நுண்ணுயிர்களுக்கு ஒவ்வாமையைக் காண்பித்தால் தலையணைகள் மற்றும் படுக்கைகளை மூடி சீல்செய்யவும்.
- குளியலறைகள் மற்றும் வேறு பூஞ்சனம் பிடிக்கக்கூடிய பகுதிகளைச் சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைத்துக் கொள்ளவும்.
- காற்றில் மிதக்கும் ஒவ்வாமையூக்கிகளுடன் உங்கள் பிள்ளையின் தொடர்பைக் குறைத்துக் கொள்வதற்கான சில தெரிவுகள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:
- உங்களுக்கு குறிப்பிட்ட சில பொருட்களால் அல்லது துணிகளால் ஒவ்வாமை ஏற்படின் நீங்கள் அவற்றை தேர்ந்தெடுக்கும்போதும், அவற்றை அணியும்போதும் கவனமாக இருக்க வேண்டும்
- உங்களுக்கு மருந்துகளால் ஒவ்வாமை இருப்பின், உங்கள் வைத்தியருக்கு அவர் சிகிச்சையளிப்பதற்கு முன்னர் அதுபற்றி அறிவித்துவிட வேண்டும்.
- உங்கள் பிள்ளைக்கு ஒரு கடுமையான ஒவ்வாமை இருந்தால், ஒரு எப்பினெஃப்ரின் சுயமாக ஊசி மருந்து குத்தும் பேனாவை (எபி-பென்) உங்கள் மருத்துவர் மருந்துக் குறிப்பெழுதித் தரக்கூடும்.
- உங்கள் பிள்ளையின் மருந்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளால் உங்கள் பிள்ளையின் ஒவ்வாமைக்குச் சிகிச்சை செய்யவும்.
- உங்கள் பிள்ளைக்கு தோல் அரிப்பு இருந்தால், கலமைன் லோஷன் அல்லது குளிர் ஒத்தனம் கொடுத்தல் வலி மற்றும் உறுத்தலைத் தணிக்கக்கூடும்.
Leave a comment