காது நோய்த்தொற்று
குழந்தைகளில் காது நோய்த்தொற்றுகள் மிகவும் பொதுவானது. காது நோய் தொற்றிக்காக மருத்துவர் நீங்கள் எப்போதும் பார்க்கத் தேவையில்லை, ஏனெனில் அவை பெரும்பாலும் 3 நாட்களுக்குள் குணமடைந்து விடும்.
காது நோய்த்தொற்றின் அறிகுறிகள்
- காதுக்குள் வலி
- 38°C அல்லது அதற்கு மேற்பட்ட உயர் வெப்பநிலை
- குமட்டல்
- சோர்வு
- கேட்கும் திறன் குறைதல்
- காதிலிருந்து சீழ் வெளியேறுதல்
- காதுக்குள் அழுத்தம் அல்லது முழுமை உணர்வு
- காது மற்றும் அதைச் சுற்றியுள்ள அரிப்பு
காது தொற்றுக்குள்ளான சிறு குழந்தைகளுக்கான அறிகுறிகள்
- காதை தேய்த்தல் அல்லது இழுத்தல்.
- எரிச்சல் அல்லது அமைதியற்றதாக இருத்தல்.
- உணவில் ஆர்வமின்மை
- சில ஒலிகளுக்கு எதிர்வினையாற்றமை
- சமநிலையை இழந்து கொண்டே இருத்தல்.
பெரும்பாலான காது நோய்த்தொற்றுகள் 3 நாட்களுக்குள் குறைந்துவிடும் , இருப்பினும் சில நேரங்களில் அறிகுறிகள் ஒரு வாரம் வரை நீடிக்கும்.
காது நோய்த்தொற்றின் போது நீங்களே உங்கள் காதுகளுக்கு சிகிச்சையளிப்பது எப்படி?
காது நோய்த்தொற்றிலிருந்து ஏதேனும் வலி மற்றும் அசௌகரியத்தை விடுவிக்க செய்யவேண்டியவையும், செய்யக்கூடாதவையும் பின்வருமாறு:
செய்யவேண்டியவை
- பாராசிட்டமால் அல்லது இப்யூபுரூஃபன் போன்ற வலி நிவாரணி மருந்துகளைப் பயன்படுத்துதல் (16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆஸ்பிரின் எடுக்கக்கூடாது).
- காதில் ஒரு சூடான அல்லது குளிர்ந்த துணி வைத்தல்.
- எந்தவொரு வெளியேற்றத்தையும் பஞ்சின் மூலம் காதை துடைப்பது
செய்ய கூடாதவை
- காதின் உள்ளே உள்ள குறும்பியை (wax) cotton buds அல்லது உங்கள் கைவிரல்களினால் நீக்கக்கூடாது.
- உங்கள் காதினுள் தண்ணீர் அல்லது ஷாம்பு உட்புக விடக்கூடாது.
- டிகான்கெஸ்டண்டோ (மூக்கடைப்பு நீக்கி)அல்லது ஹிஸ்டமைன்களைப் (antihistamine ) பயன்படுத்தவேண்டாம் – காது தொற்றுக்கு அது உதவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும்
- 3 நாட்களுக்குப் பிறகு நன்றாக குணமடைய விட்டால்
- தொடர் காச்சல்
- காதில் சுற்றி வீக்கம் இருந்தால், முக்கியமாக பின்புறத்தில்
- காதில் இருந்து திரவம் வெளியேறுதல்
- காது கேளாமை அல்லது செவிப்புலன் மாற்றம்
- தலைச்சுற்றல்
மருத்துவர் சிகிச்சை
உங்கள் காது நோய்த்தொற்றுக்கான காரணத்தை பொறுத்து மருந்தை மருத்துவர் பரிந்துரைக்கலாம் .
காதுக்குள் தொற்று
Antibiotics பொதுவாக வழங்கப்படுவதில்லை, ஏனெனில் காதுக்குள் ஏற்படும் தொற்றுநோய்கள் பெரும்பாலும் தானாகவே குணமாகிவிடும்.
எப்போது Antibiotics பரிந்துரைக்கப்படலாம்:
- காது தொற்று 3 நாட்களுக்குப் பிறகும் நீடித்தால் .
- குழந்தைக்கு காதிலிருந்து திரவம் ஏதேனும் வெளியேறினால்
- உங்கள் பிள்ளைக்கு 2 வயதுக்கு குறைவாகவும் மற்றும் இரு காதுகளிலும் தொற்று இருந்தால் அவை பரிந்துரைக்கப்படலாம்.
வெளிப்புற காது நோய்த்தொற்றுகள்
உங்கள் மருத்துவரால் பருந்துரைக்ககூடிய மருந்துகள் :
- Antibiotics காது சொட்டு- பாக்டீரியா தொற்றுக்கு எதிராக
- ஸ்டீராய்டு காது சொட்டுகள் – வீக்கத்தைக் குறைக்க
- பூஞ்சை காது சொட்டு-பூஞ்சை தொற்றுக்கு எதிராக
- ஆண்டிபயாடிக் மாத்திரைகள் – பாக்டீரியா தொற்று கடுமையாக இருந்தால்.
காது சொட்டு சரியாக பயன்படுத்தப்படவில்லை என்றால், அவை வேலை செய்யாமல் போகலாம்.
காது நோய்த்தொற்றுகளை எவ்வாறு தடுக்க முடியும்??
உள் காது நோய்த்தொற்றுகளைத் தவிர்க்க உதவும் முறைகள்:
- தடுப்பூசிகள் எடுத்துகொண்டமையை உறுதிசெய்தல்.
- குழந்தைக்கு 6 மாத குழந்தையான பிறகு றப்பர் சூப்பி (Soother) கொடுக்க கூடாது
வெளிப்புற காது நோய்த்தொற்றுகளைத் தவிர்க்க உதவும் முறைகள்:
- காதுகளில் உள் காட்டன் பட் அல்லது விரல்களை செலுத்தக்கூடாது
- நீங்கள் நீந்தும்போது காது பிளக்குகள் அல்லது காதுகளுக்கு மேல் நீச்சல் தொப்பியைப் பயன்படுத்துதல்.
- நீங்கள் குளிக்கும்போது உங்கள் காதுகளில் தண்ணீர் அல்லது ஷாம்பு செல்வதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
Leave a comment