குடல்வால் அழற்சி நோய்
குடல்வால் அழற்சி நோய் என்பது குடல்வாலில் ஏற்படும் வீக்கம். குடல் வால் என்பது பெருங்குடலின் முற்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய குழாய் போன்ற அமைப்பாகும். அது உங்கள் குழந்தையின் வயிற்றின் வலது அடிப்பாகத்தில் அமைந்திருக்கிறது. அதற்கு உடலில் அறியப்பட்ட செயற்பாடுகள் ஏதுமில்லை.
குடல்வால் அழற்சி நோயின்அறிகுறிகள்
- தொப்புழைச் சுற்றி வலி தொடக்கி , சில மணி நேரத்தில், வலி கீழ் வலது பக்கத்திற்கு பயணிக்கிறது, பின் வலி நிலையானதாகவும் கடுமையானதாகவும் மாறும்.
- அந்தப் பகுதியை இலேசாக அழுத்தும்போது, ஆழமாக சுவாசிக்கும்போது, மற்றும் அசையும்போது வலி அதிகரிக்கும்
- பசியின்மை
- குமட்டுதல்
- வாந்தி
- காய்ச்சல்
குடல்வால் வெடித்தால், அடிவயிறு முழுவதிலும் தொடர்ச்சியான, கடும் வலியை ஏற்படும்
நீங்கள் மருத்துவ உதவியை எப்போது நாட வேண்டும்
உங்களுக்கு வயிற்று வலி இருந்தால், அது படிப்படியாக மோசமைடந்தால் அருகில் உள்ள பொது மருத்துவர் ஆலோசனை பெறவும்.
உங்கள் பிள்ளைக்கு கடுமையான அடிவயிற்றுவலி அல்லது விபரிக்கமுடியாத தொடர்ச்சியான காய்ச்சல் அல்லது உறுத்தல்கள் இருந்தால் உங்கள் பிள்ளையை உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்.
சிக்கல்கள்
வீக்கமடைந்த அல்லது தொற்றுநோய் ஏற்பட்ட குடல்வால்களுக்குச் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், குடல்வால் வெடிக்கலாம். இது வயிற்றறையின் உட்புற உறையில் மரணத்தை விளைவிக்கக்கூடிய தொற்றுநோயை ஏற்படுத்தலாம்.
குடல்வால் அழற்சிக்கான சிகிச்சை முறைகள்
குடல்வால் அழற்சி ஏற்பட்டால் , உங்கள் குடல்வால் விரைவில் அகற்றப்பட வேண்டியிருக்கும்.இந்த அறுவைச் சிகிச்சை குடல்வாலெடுப்பு என அழைக்கப்படும்
பொதுவாக கீஹோல் அறுவை சிகிச்சை (லேபராஸ்கோபி) மூலம் அகற்றப்படுகின்றது
சில வேளைகளில் குடல்வால் வெடித்தால் அல்லது அணுகல் மிகவும் கடினமாக இருந்தால் திறந்த அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும்.
குடல்வால் நீக்கப்பட்ட பிறகு முழு மீட்பு பெற வழக்கமாக இரண்டு வாரங்கள் ஆகும். ஆனால் திறந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு 6 வாரங்கள் வரை கடுமையான செயல்களைத் தவிர்க்க வேண்டியிருக்கும்.
குடல்வால் அழற்சி ஏற்படுத்துவதற்கான காரணம்
குடல்வால் அழற்சி ஏற்படுத்துவதற்கான காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. பல சந்தர்ப்பங்களில் குடல்வால் அடைக்கப்படும்போது குடல்வால் அழற்சி ஏற்படுகிறது. உதாரணமாக சிறிய மல துண்டு அல்லது மேல் சுவாசக் குழாய் தொற்றின் போது நிணநீர் வீங்குவதால் குடல்வால்அடைக்கப்படலாம்
Leave a comment