சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள் (RTI’s)
சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள் (RTI) சைனஸ்கள், தொண்டை, சுவாசகுழாய் பாதை அல்லது நுரையீரலை பாதிக்கும். பெரும்பாலான சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள் சிகிச்சையின்றி தானாகவே குணமாகிவிடும், ஆனால் சில நேரங்களில் மட்டுமே நீங்கள் மருத்துவரை பார்க்க வேண்டியிருக்கும்.
சுவாசக்குழாய் நோய்த்தொற்றை நீங்கள் எவ்வாறு கண்டறிவது ?
சுவாசக்குழாய் நோய்த்தொற்று நோய்க்கான அறிகுறிகள் :
- இருமல் – சிலவேளைகளில் சளியுடன் கூடிய இருமல்
- தும்மல்
- மூகைடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல்
- தொண்டை புண் / தொண்டை வலி
- தலைவலி
- தசை வலிகள்
- மூச்சுத் திணறல்,
- இறுக்கமான மார்பு அல்லது மூச்சுத்திணறல்
- அதிக வெப்பநிலை (காய்ச்சல்)
- பொதுவாக உடல்நிலை சரியில்லாமல் உணர்வது
நீங்களே செய்யக்கூடிய விஷயங்கள்
பெரும்பாலான சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள் 1 முதல் 2 வாரங்களுக்குள் தானாகவே சரி ஆகிவிடும் . நீங்கள் வழக்கமாக வீட்டிலேயே அறிகுறிகளுக்கு ஏற்றவாறு சிகிச்சையளிக்கலாம்.
நீங்கள் செய்ய வேண்டியவை
- நிறைய ஓய்வு எடுங்கள்
- சளியை தளர்த்தவும், இருமலை எளிதாக்கவும் நிறைய தண்ணீர் குடிக்கவும்
- இருமலைத் தணிக்க சூடான எலுமிச்சை மற்றும் தேன் பானம் குடிக்கவும் (இது குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல)
- உங்களுக்கு தொண்டை புண் இருந்தால் வெதுவெதுப்பான உப்பு நீரில் கொப்பளுக்கவும் (குழந்தைகள் இதை முயற்சிக்கக்கூடாது)
- கூடுதல் தலையணைகளைப் பயன்படுத்தி உங்கள் தலையை உயர்த்தி தூங்கவும். இது சுவாசத்தை எளிதாக்க உதவும்.
- வலி நிவாரணி மருந்துகளைப் பயன்படுத்துங்கள் . இது காய்ச்சலை மட்டும் இன்றி தொண்டை புண், தலைவலி மற்றும் தசை வலி ஆகியவற்றைக் குறைக்க உதவும்
செய்யக்கூடாதவை
- குழந்தைகளுக்கு சூடான நிராவி பிடிக்க வேண்டாம், இது சிலவேளைகளில் சூட்டுப்புண் ஏற்படலாம்
- 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆஸ்பிரின் (ASPRIN) கொடுக்க வேண்டாம்
- புகைபிடிக்காதீர்கள் – இது உங்கள் அறிகுறிகளை மோசமாக்கும்
மருந்துக்கடைகளில் நீங்கள் என்ன வாங்கலாம்?
- அறிகுறிகளைப் குறைக்க டிகோங்கஸ்டெண்ட்ஸ் (decongestant) மற்றும் நாசி ஸ்ப்ரே (Nasal Spray) போன்ற மருந்துகள்,
- இருமல் மருந்து ,
- வலி, காச்சல் குறைப்பதற்கு பாராசிட்டமால்(paracetamol) மற்றும் (Ibuprofen) போன்ற மருந்துகளை நீங்கள் மருந்துகடைளில் வாங்கலாம்.
குழந்தைகள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு சில மருந்துகள் பொருத்தமானவை அல்ல. எனவே மருந்துகள் எடுப்பதற்கு முன் அங்கிருக்கும் மருந்தாளர் ஆலோசனை பெறுவது அவசியம்
உங்கள் குடும்ப மருத்துவர் எவ்வாறு உதவ முடியும் ?
சுவாசக்குழாய் நோய் தொற்றுக்கான சிகிச்சை, நோய் தொற்றுக்கான காரணத்தைப் பொறுத்தது வேறுபாடும் :
- வைரஸ் ( சலதோஷம் /சளி போன்றது ) – இது வழக்கமாக சில வாரங்களுக்குள் தானாகவே சரி ஆகிவிடும். இதற்க்கு Antibiotics உதவி செய்யாது.
- பாக்டீரியா ( நிமோனியா போன்றவை ) – இதற்க்கு உங்கள் குடும்ப மருத்துவர் antibiotics பரிந்துரைக்கலாம் .(நீங்கள் antibiotics எடுக்க ஆரம்பித்து சில நாட்களில் நன்றாக உணர ஆரம்பித்தாலும் கூட உங்கள் குடும்ப மருத்துவர் அறிவுறுத்தியபடி முழுமையாக எடுக்க வேண்டும் )
சில நேரங்களில் உங்கள் சுவாச நோய்க்குழாய் நோய்க்காகன காரணம் என்ன என்பதைக் காண உங்கள் சளியின் மாதிரி சோதிக்கப்பட வேண்டியிருக்கும்.
Antibiotics யின் பயன்பாடு
Antibiotics பாக்டீரியா தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இவை வைரஸ் தொற்றுநோய்களுக்கு வேலை செய்யாது.தேவை இல்லாமல் எடுக்க கூடாது.
சுவாச தொற்று நோய் மற்றவர்களுக்கு பரவாமல் எப்படி தவிர்ப்பது ?
- நீகள் இருமும் போதும் தும்மும் போதும் , முழம் கையால் மூடவும்
- உங்கள் கைகளை தவறாமல் கழுவ வேண்டும்
- பயன்படுத்தப்பட்ட திசுக்களை உடனடியாக தூக்கி எறியுங்கள்
சுவாசதொற்று நோய் வருவதை எப்படி தவிர்ப்பது ?
- தடுப்பூசி – சில தொற்று நோய்களுக்கு தடுப்பூசி உள்ளது , இதை பற்றி உங்கள் குடும்ப மருத்துவரிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்
- புகைப்பதை நிறுத்துங்கள்
- குறைந்த அளவு மது குடிக்கவும்
சுவாச தொற்று நோய் வகைகள்
பல்வேறு சுவாச தொற்று வகைகள் உள்ளன. அவை வழக்கமாக மேல் மற்றும் கீழ் சுவாச தொற்று என வகை படுத்தப்படுகின்றன
மேல் சுவாச நோய் தொற்றுக்கும் மற்றும் கீழ் சுவாச நோய் தொடருக்கும் உள்ள வேறுபாடு | |
மேல் சுவாச நோய் (சைனஸ்கள் மற்றும் தொண்டை) | கீழ் சுவாச நோய் (காற்றுப்பாதைகள் மற்றும் நுரையீரல்) |
சாதாரண சளி (Common Cold) | Bronchitis |
சைனஸ் தொற்று | Bronchiolitis |
டான்சில்லிடிஸ் (Tonsillitis) | Chest infection |
லாரிங்கிடிஸ் (Laryngitis) | நிமோனியா (நுரையீரல் தொற்று) |
Leave a comment