சிறுநீரக செயலிழப்பு என்றால் என்ன?
சிறுநீரகங்களின் முதன்மை செயல்பாடு இரத்தத்தில் இருக்கும் தேவையற்ற கழிவு பொருட்களை நீக்கி, அவற்றை சிறுநீர் வழியாக உடலில் இருந்து வெளியேற்றுவது தான். சிறுநீரகம் தனது வேலையை சரியாக செய்யாவிட்டாலோ அல்லது முற்றிலுமாக நிறுத்திவிட்டாலோ, மோசமான சிறுநீர் உற்பத்திக்கு வழிவகுக்கும், இந்த நிலை தான் சிறுநீரக செயலிழப்பு எனப்படுகிறது.
சிறுநீரக செயல் இழப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம்
- தீடீர் சிறுநீரக செயலிழப்பு(AKI) – சில மணி நேரத்தில் இருந்து ,சில நாட்களுக்குள் ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு.இதன் பாதிப்பு மீளக்கூடியது.
- நீண்ட நாள் சிறுநீரக செயலிழப்பு (CKD)- மாதத்தில் இருந்து வருடக்கணக்கில் ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு.இதன் பாதிப்பு மீளமுடியாதது.
தீடீர் சிறுநீரக செயலிழப்பு
தீடீர் சிறுநீரக செயலிழப்புகான காரணத்தை மூண்டு வகையாக பிரிக்கலாம்
- சிறுநீரகதிற்கு முன் காரணிகள்
- சிறுநீரக காரணனிகள்
- சிறுநீரகதிற்கு பின் காரணிகள்
1.சிறுநீரகதிற்கு முன் காரணிகள்
சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் குறையும்போது, அது சிறுநீரகத்தை சேதாரப்படுத்தி தீடீர் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுத்துகிறது.
- குறைந்த இரத்த அளவு- இரத்தப்போக்கு
- கடுமையான நீரிழப்பு அதிக வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு
- இதய செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு அல்லது செப்சிஸ் ஆகியவற்றின் விளைவாக ஏற்படும் குறைவான இரத்தத்தை அழுத்தம்
2.சிறுநீரக காரணனிகள்
சிறுநீரக திசுக்களை தாக்குவதால் சிறுநீரகத்தில் ஏற்படும் காயங்களினால் ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு
- ஆஸ்பிரின், இப்யூபுரூஃபன் போன்ற மாத்திரைகள்
- ரசாயனங்கள் அல்லது கனரக உலோகங்கள் அல்லது கிளாமருல நீரகக் குற்றழல் (குளோமெருலோனெர்பிரிஸ்) போன்ற ஆட்டோஇம்யூன் (தன்னெதிர்ப்பு நிலைமைகள்)
- சிறுநீரகங்களுக்குள் உள்ள இரத்த நாளங்களில் வீக்கம் மற்றும் அடைப்பு போன்றவை (வாஸ்குலிடிஸ் எனப்படும் அரிய நிலை)
- நோய்த்தொற்றுகள்
- சில வகையான எக்ஸ்-கதிர்களில் பயன்படுத்தப்படும் திரவ சாயத்தின் எதிர்விளைவு
- நீரிழிவு நோய்.
3.சிறுநீரகதிற்கு பின் காரணிகள்
சிறுநீரகதிற்கு பின் ஏற்படும் தடுப்பினால் ஏற்படும் சிறுநீரக வடிகால் பாதிப்பினால் ஏற்படும் செயலிழப்பு
- வீங்கின புரோஸ்டேட்
- கருப்பை அல்லது சிறுநீர்ப்பை கட்டி போன்ற இடுப்பில் உள்ள கட்டி
- சிறுநீரக கற்கள்
அறிகுறிகள்
- குறைந்த சிறுநீர் வெளியேற்றம்
- உடலில் திரவ நிலையை தக்க வைத்தல் (திரவங்கள் உடலுக்குள்ளேயே தங்கி விடுதல்) கைகள், கால்கள் மற்றும் முகத்திலும் வீக்கம்
- சுவாசகோளாறுகள் மூச்சடைப்பு, குமட்டல் மற்றும் வாந்தி
- பசியின்மை, மன குழப்பம் மற்றும் உடல் பலவீனம்
பரிசோதனை முறைகள்
- கிரியாட்டினைனின், யூரியா, பொட்டாசியம் ,சோடியம் மற்றும் குளோமருலர் வடிகட்டுதல் விகிதம் (ஜி.எஃப்.ஆர்) ஆகியவற்றின் அளவை தெரிந்துகொள்வதற்கு இரத்த பரிசோதனை
- சிறுநீர் சோதனைகள்
- சிறுநீரக அல்ட்ராசவுண்ட்,சி.டி ஸ்கேன் போன்ற ஸ்கேன் செய்யப்படலாம்
சிகிச்சை
இந்த நோய் தாக்கத்திற்கான மறைமுக அடிப்படை காரணிகளை கண்டறிந்து சரிசெய்வது மற்றும் ஒட்டுமொத்த சிறுநீரக ஆரோக்கியத்தை முழுவதுமாக மேம்படுத்துவது , ஆகியவற்றில் சிகிச்சை அளிக்கும் போது கவனம் செலுத்தப்படுகிறது.
- கடுமையான நீரிழப்பினால் ஏற்பட்டு இருந்தால் பொதுமான தண்ணீர் பருகுவது
- தொற்று இருந்தால் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் – antibiotics
- மருந்தினால் ஏற்பட்டு இருந்தால் குறித்த மருந்துகளை எடுப்பதை நிறுத்துவது
- சிறுநீர் வடிகுழாய் அடைப்பு இருந்தால் Urinary catheterization
தீடீர் சிறுநீரக செயலிழப்பு உடைய பெரும்பாலான மக்கள் முழு குணமடைகிறார்கள், ஆனால் சிலர் நாள்பட்ட சிறுநீரக நோய் அல்லது நீண்டகால சிறுநீரக செயலிழபிற்கு உள்ளகுகிரார்கள் .
தீவிரமான சந்தர்ப்பங்களில், உடலில் தீங்கு விளைவிக்கும் கழிவுகள், கூடுதல் உப்பு மற்றும் நீர் ஆகியவற்றை வெளியேற்ற டயாலிசிஸ் தேவைபடுகின்றது
நீண்ட நாள் சிறுநீரக செயலிழப்பு (CKD)
என்னொரு பதிவில் பார்க்கலாம்
Leave a comment