நீரிழிவு நோய் பற்றி எல்லோரும் அறிந்ததே. நீரிழிவு நோய் சில வேளைகளில் அவசர நிலைக்கு தள்ளப்படலாம்.நீரிழிவு நோய் அவசர நிலைகளும் அதற்க்கனான அறிகுறிகளையும் தெரிந்து கொள்ளுவோம் .
நீரிழிவு நோயின் அதி முக்கியமான அவசர நிலை நோய்கள்.
- இரத்தச் சர்க்கரைக் குறைவு
- நீரிழிவு கீட்டோ அமிலத்துவம்
- மற்றும் அதிக osmolar அதிசக்கரை நிலை
இரத்தச் சர்க்கரைக் குறைவு : சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு , திடீர் சக்கரை குறைவதற்கு பொதுவான காரணங்கள்
- அதிக அளவு நீரிழிவு மருந்தை எடுப்பது,குறிப்பாக இன்சுலின் அளவு அதிகமாக எடுப்பது.
- நேரத்துக்கு சாப்பட்டை சாப்பிடாதது அல்லது தவிர்ப்பது.
- அதிகமான உடல் உழைப்பு.
உடலில் சக்கரை அளவு குறைந்ததற்க்கான முன்னெச்செரிக்கை அற்குறிகள்
தலைச்சுற்று, நடுக்கம்,மயக்கம் வருவது போல் போன்ற உணர்வு,படபடப்பு,வியர்த்தல்,சோர்வு போன்றவை முன்னெச்செரிக்கை அறிகுறிகளாக ஏற்படலாம் எனினும் அதி மிக குறைந்த நிலையில் சக்கரை இருந்தால் மயக்கம்,சுயநினைவை இழத்தல் போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம்.
நீரிழிவு கீட்டோ அமிலத்துவம்: ஆங்லிலத்தில் diabetic keto acidosis என்று அழைக்கப்படுகிறது .இது ரத்தத்தில் அதிக சக்கரை மற்றும் அமில தன்மை அதிகமுள்ள நிலையை குறிக்கும் .இது பெரும்பாலும் முதல் வகை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கே ஏற்படுகின்றது.
முதலில் எவ்வாறு இந்த நிலை ஏற்படுகின்றது என்று பார்ப்போம் .
உடலில் உள்ள செல்களுக்குள், இரத்தத்தில் உள்ள சக்கரை உள்ளே செல்வதற்கு இன்சுலின் தேவை படுக்குறது.முதல் வகை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கணையம் இன்சுலினை சுரப்பது இல்லை, எனவே வெளியில் இருந்து எடுக்கும் இன்சுலின் மூலமே உங்கள் செல்கள் glucose என்னும் எரிபொருளை பெற முடியும்.இவ்வாறு உடல் glucose மூலம் சக்தியை பெற முடியாத பொழுது உடலில் உள்ள கொழுப்பின் மூலம் தனது சக்தியை பெற்றுக்கொள்ளும்.ஆனால் இவ்வாறு கொழுப்பை எரிபொருளாக பயன்படுத்தி சக்தியை பெறும் பொழுது , Ketones என்னும் துணை பொருளும் கிடைக்கப்படுகின்றது, இது ரத்தத்தின் அமிலத்தன்மையை உயர்த்துகிறது. இது பல்வேறு உயிரிக்கு ஆபத்தான பல பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றது.
இந்த நிலை ஏற்படுவதற்க்கான காரணங்கள்
- நேரத்துக்கு இன்சுலின் எடுக்காமை அல்லது இன்சுலின் பற்றி கொடுக்கபட்ட அறிவித்த்தலை சரிவர பின்பற்றமை
- தொற்று நோய் ஏற்படும் போது
- கர்ப்பமாக இருக்கும் பொழுது
- Steriods போன்ற மருத்துகள் எடுக்கும் போது
- போதியளவு சாப்பிடாமை
இதற்க்கான அறிகுறிகள்
தாகம் எடுத்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், வாந்தி வருவது போன்ற உணர்வு,ஆழமாக மற்றும் வேகமாக சுவாசித்தல், சுவாசத்தில் – பழம் போன்ற வாசனை, சோர்வு மற்றும் குழப்பம் இது போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
சிகிச்சை பெறவில்லை எனில் சிறுநீர் செயல் இழப்பு, மூளையில் நீர்க்கட்டு , நுரையீரலில் நீர்கட்டு, நோய் தொற்றுகள்,ரத்தத்தில் கனிமத்தில் மாற்றம் , ரத்த நாள கட்டி போன்றவற்றை ஏற்படுத்தலாம்.விரைந்து செயல்படவில்லை எனில், இறப்பை கூட ஏற்படுத்தலாம்.
அதிக osmolar அதி சக்கரை நிலை: இது நீர்ச்சத்து ரத்தத்தில் குறைவதால் ஏற்படும் அதி ரத்த அடர்த்தியை குறிகின்றது.
இரண்டாம் வகை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கே இது பெரும்பாலும் ஏற்படுகின்றது.சக்கரை அளவு ரத்தத்தில் அதிகமாவதால், நீர்ச்சத்து சக்கரையுடன் முக்கியமாக சிறுநீரில் இழப்பதனால் இது ஏற்படுகின்றது
இரண்டாம் நிலை நீரழிவு நோய்க்கு பெரும்பாலும் இன்சுலின் எதிர்வினையே காரணமாகும்.ஆகவே சிறிய இன்சுலின் அளவாவது கணையம் சுரக்கும்.அதனால் முதல் நிலை நீரிழிவு நோய் போல் ரத்தில் பெரும்பாலும் அமிலத்தன்மை அதிகமாது.
இது ஏற்படுவதற்கான காரணங்கள்
- வயிற்றுபோக்கு மற்றும் அடிக்கடி வாந்தி எடுப்பதன்னால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பினால்
- தொற்று நோய் ஏற்படும் போது.
- Diuretics போன்ற மருந்துகள் எடுப்பதால்
- சரியான முறையில் பருந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளமை
போன்ற காரணங்களால் இது ஏற்படலாம்
இதற்கான அறிகுறிகள்
தாகம் எடுத்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், வாந்தி வருவது போன்ற உணர்வு சோர்வு மற்றும் குழப்பம் இது போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
நீர் இழப்பினால், உடல் வறட்சி மட்டும் இல்லாமல் ரத்த கனிமத்திலும் மாற்றம் ஏற்படுகின்றது இவற்றை சரி செய்யாவில் உயிருக்கு ஆபத்தான நிலையை கூட ஏற்படுத்தலாம்.
உங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பின், சரிவர மருந்துகளையும் மற்றும் மருத்துவரின் பருந்துரைகளையும் பின்பற்றுங்கள்.மேல் கூறிய அறிகுறி இருப்பின் உடனடி மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
Leave a comment