புற்றுநோய்க்கான சிகிச்சைகள் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.ஆனால் எப்போது மருத்துவரை ஆலோசனை பெறவேண்டும் என்று தெரிந்து கொள்வது கடினம். எந்த அறிகுறிகளை எதிர்பார்க்கலாம், எந்தெந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ கவனிப்பு தேவை என்று உங்கள் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
மருத்துவ கவனிப்பு தேவைப்படும் சில தீவிர பக்க விளைவுகள்
- நோய் தொற்றுகள்
- உடல் நீர்வறட்சி
- குறைந்த இரத்த அணுக்களின் எண்ணிக்கை
- ஆழமான இரத்தநாள உறைவு /நுரையீரல் இரத்த தமனி உறைவு
- கட்டி சிதைவு நோய்க்குறி
நோய் தொற்றுகள்:
நீங்கள் கீமோதெரபியில் இருக்கும் பொழுது , இரத்த அணுக்கள் குறைந்து , உங்கள் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் , இதனால் எந்த நோய்க்கிருமிகளும் உங்களை எளிதில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். உங்களுக்கு நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பின் உடனடி மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் உதாரணமாக நுரையீரல் தொற்று சம்பந்தமான அறிகுறிகள் இருமல் , மூச்சு திணறல் மற்றும் சிறுநீர் தொற்று அறிகுறிகள் , அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல்/வலி , போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடி மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் .குறிப்பாக காச்சல் ஏற்படின் உடனடி மருத்துவமனைக்கு செல்வது அவசியம்.
உடல் நீர்வறட்சி:
மருந்தின் பக்க விளைவாக அல்லது குடல் நோய் தொற்றினால் அடிக்கடி வாந்தி அல்லது வயிற்று போக்கு ஏற்படலாம். இதனான் நீர்ச்சத்து மட்டுமில்லாமல் தேவையான கனிமங்களையும் இழக்க நேரிடும். இது உடல் உறுப்புகளுக்கு பல்வேறு பதிப்புகளை ஏற்படுத்தலாம் முக்கியமாக சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம் .முக்கிய கனிம அளவு குறைவதால் வலிப்பு , ஒழுங்கற்ற இதய துடிப்பு போன்ற தீவிர நிலைகளையும் இது ஏற்படுத்தலாம்.உங்களால் வாய் வழியாக எதுவும் எடுக்க முடியவில்லை எனில் மருத்துவ மனை சென்று சிகிச்சை பெறுவது அவசியம் .
குறைந்த இரத்த அணுக்களின் எண்ணிக்கை:
சிகிச்சையில் இருக்கும் பொழுது , இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம், இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம்.
உதாரணமாக
- Hemoglobin – இரத்த சோகை / அறிகுறிகள் – தலை சுற்று , மூச்சுத்திணறல்
- neutrophil – Sepsis / நோய் தொற்றுகள் / அறிகுறிகள் – காச்சல்…
- platelets – இரத்தப்போக்கு / இரதம் உறைவதில் பிரச்சனை – எளிதில் சிராய்ப்பு, மலத்தில் ரத்தம் , இரத்த வாந்தி ..
ஆழமான இரத்தநாள உறைவு (DVT) /நுரையீரல் இரத்த தமனி உறைவு (PE):
புற்று நோய் உள்ளவர்களுக்கு இரத்த நாள கட்டி உறைவு ஏற்படுவதற்கான வாய்புகள் அதிகம்.
- ஆழமான இரத்தநாள உறைவு (DVT )- ஒரு காலில் வீக்கம், வலி
- நுரையீரல் இரத்த தமனி உறைவு ( PE) – நெஞ்சுவலி , மூச்சுத்திணறல் , படபடப்பு ..
கட்டி சிதைவு நோய்க்குறி(Tumor lysis syndrome) :
கட்டி சிதைவு நோய்க்குறி என்பது புற்றுநோய்க்கான சிகிச்சையின் போது ஏற்படக்கூடிய ஒரு சிக்கலாக வளர்சிதை மாற்றத்தை குறிக்கின்றது .இதன் பொழுது அதிக அளவிலான செல்கள் சிகிச்சையால் ஒரே நேரத்தில் கொல்லப்படுகின்றன, அவற்றின் உள்ளடக்கங்களை இரத்த ஓட்டத்தில் வெளியிடபடுகின்றன . லிம்போமாக்கள் மற்றும் லுகேமியாக்கள் சிகிச்சையின் பின்னர் இது மிகவும் பொதுவாக நிகழ்கிறது.இதன் பொழுது இரத்தக் கனிமங்களில் மாற்றம் ஏற்படுவதால் வலிப்பு , சிறுநீர் செயலிழப்பு, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, இறப்பு போன்றவை ஏற்படுகின்றன
எப்பொழுது மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்
- 100.4 டிகிரிக்கு மேலான காச்சல்
- குளிர்
- கடுமையான தலைவலி அல்லது கழுத்து விறைப்பு
- தொடர்ந்து இருமல்
- சிறுநீர் கழிக்கும் பொழுது வலி அல்லது எரிச்சல்
- கடுமையான மூச்சுத் திணறல்
- எளிதில் சிராய்ப்பு அல்லது இரத்தப்போக்கு
- வாய் அல்லது உதடு புண்கள்
- குடிக்கவோ சாப்பிட முடியாத நிலை முடியாது நிலை
- அடிக்கடி வாந்தி
- அதிகபடியான வயுற்றுப்போக்கு
Leave a comment