வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி
வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி என்பது பெரியவர்கள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பொதுவானது. அநேகமான இது சந்தர்ப்பங்களில் வைரஸினால் ஏற்படும் நோய்த்தொற்றினால், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படுகின்றது. இது ஓரிரு நாட்களில் சரியாகிவிடும்
உங்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஒன்றாக அல்லது தனித்தனியாக இருந்தாலும் ஆலோசனை ஒன்றுதான்.
எவ்வாறு நீங்களே சிகிச்சை அளிப்பது?
உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைக்கு நீங்கள் வீட்டிலேயே சிகிச்சையளிக்கலாம். இதில் மிக முக்கியமான விடையம் , நீரிழப்பைத் தவிர்க்க நிறைய திரவம் அருந்துவது.
செய்யவேண்டியவை
- வீட்டில் தங்கி நிறைய ஓய்வு எடுங்கள்
- நிறைய தண்ணீர் குடிக்கவும் – உங்களால் முடியவில்லை என்றால் சிறிய அளவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்
- குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் / புட்டிப்பால் கொடுங்கள் – வாந்தி எடுத்தால், அடிக்கடி சிறிய அளவில் கொடுக்க முயற்சிக்கவும்
- ஃபார்முலா அல்லது திட உணவுகளில் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டங்களுக்கு இடையில் சிறிய அளவு தண்ணீர் கொடுங்கள்
- உங்களால் முடிந்தவரை சாப்பிடுங்கள் – நீங்கள் குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடவோ தவிர்க்கவோ தேவையில்லை
- உங்களுக்கு அசௌகரிகமாக இருந்தால் பாராசிட்டமால் எடுத்துக் கொள்ளுங்கள் – உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதற்கு முன் மருந்துச்சீட்டை சரிபார்க்கவும்
வேண்டாம்
- பழச்சாறு அல்லது கார்பனேற்றப்பட்ட பானைகளை எடுக்க வேண்டாம் .இவை வயிற்றுப்போக்கை மோசமாக்கும்
- குழந்தை ஃபார்முலா பாலை நீர்க்கச்செய்ய வேண்டாம் – வழக்கமான முறையிலையே அதைப் பயன்படுத்துங்கள்
- வயிற்றுப்போக்கை நிறுத்த 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க வேண்டாம்
- 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆஸ்பிரின் கொடுக்க வேண்டாம்
வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி எவ்வளவு காலம் நீடிக்கும்
- வயிற்றுப்போக்கு பொதுவாக 5 முதல் 7 நாட்களுக்குள் நின்றுவிடும்
- வாந்தியெடுத்தல் பொதுவாக 1 அல்லது 2 நாட்களில் நின்றுவிடும்
வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி எளிதில் பரவக்கூடியது
குறைந்தது உங்களுக்கு வாந்தி எடுப்பது நிற்கும் வரை அல்லது 2 நாட்களுக்கு வயிற்றுப்போக்கு இல்லாதவரை பள்ளியிலிருந்து அல்லது வேலையிலிருந்து விலகி இருங்கள்.
தொற்றுபரவுவதை எவ்வாறு தடுப்பது:
செய்யவேண்டியது
- உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி கழுவ வேண்டும்
- மலம் அல்லது வாந்தியைக் கொண்டிருக்கும் எந்த ஆடைகளையும் அல்லது படுக்கையையும் தனித்தனியாக ஒரு சூடான தண்ணீரில் கழுவவும்
- கழிப்பறை இருக்கைகள், கைப்பிடிகள், குழாய்கள், மற்றும் கதவு கைப்பிடிகள் ஒவ்வொரு நாளும் கழுவுங்கள்
செய்ய கூடாதவை
- முடிந்தால் மற்றவர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டாம்
- துண்டுகள், துணிகள் , பாத்திரங்களைப் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்
மருந்துக்கடைகளில் நீங்கள் என்ன வாங்கலாம் :
- நீங்கள் / உங்கள் பிள்ளை உடல்நீர்வறட்சியடைந்து காணப்பட்டால் (வறண்ட வாய், சுருசுருப்பின்மை, குறைந்த தடவைகள் சிறுநீர் கழித்தல்) வாய்வழி உடல்நீரேற்றக் கரைசலை உங்கள் பிள்ளைக்குக் கொடுங்கள். உங்கள் பிள்ளைக்குத் தேவையான நீர், சர்க்கரை மற்றும் உப்பை இந்த கரைசல் வழங்கும்.
- வயிற்றுப்போக்கை சில மணி நேரம் நிறுத்த மருந்து ( லோபராமைடு போன்றவை ) – இது 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல
நீங்கள் உங்கள் குடும்ப மருத்துவரிடம் எப்பொழுது அழைத்து செல்ல வேண்டும்
- 12 மாதங்களுக்கும் குறைவான குழந்தையைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள்
- உங்கள் பிள்ளை தாய்பால் அல்லது பாட்டில் பால் எடுப்பதை நிறுத்தி விட்டால்
- 5 வயதிற்குட்பட்ட குழந்தைக்கு நீரிழப்பு அறிகுறிகள் இருப்பின்
- உங்களுக்கு அல்லது உங்கள் பிள்ளைக்கு உடல்நீரேற்றக் கரைசலை பயன்படுத்திய பின்பும் நீரிழப்பு அறிகுறிகள்இருப்பின்
- நீங்களோ அல்லது உங்கள் பிள்ளையோ வாந்தியால் எந்த திரவத்தையும் எடுக்க முடியாத நிலை,
- உங்களுக்கு அல்லது உங்கள் பிள்ளைக்கு மலத்தில் இரத்தம் இருப்பின் ,
- உங்களுக்கு அல்லது உங்கள் பிள்ளைக்கு 7 நாட்களுக்கு மேல் வயிற்றுப்போக்கு அல்லது 2 நாட்களுக்கு மேல் வாந்தி உள்ளது எனில்,
வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியின் காரணங்கள்
இரப்பைக் குடலழற்சி (இரைப்பை வைரஸ்) எனப்படும் வைரஸினால் ஏற்படும் நோய்த்தொற்றினால், அநேகமான சந்தர்ப்பங்களில் வாந்தி மற்றும் வாந்தி ஏற்படுகின்றது. சில வேளைகளில் பக்டீரியா போன்ற நுண்கிருமிகளிளாலும் ஏற்படலாம்.
வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி ஏற்பட பிற காரணங்கள்
வயிற்றுப்போக்கு இவற்றால் ஏற்படலாம்:
- மருந்துகள் பக்க விளைவு
- உணவு ஒவ்வாமை
- irritable bowel syndrome (IBS)
- inflammatory bowel disease
- coeliac disease
- diverticular disease
வாந்தியும் இவற்றால் ஏற்படலாம்:
- கர்ப்பம்
- ஒற்றைத் தலைவலி
- labyrinthitis
- மருந்துகள் – பக்க விளைவு
- சிறுநீர் பாதை தொற்று
- குடல்வால் அழற்சி
- பித்தப்பை அழற்சி
Leave a comment