கர்ப்ப காலத்தில், பிரசவத்திற்குப் பிறகு, தாய்ப்பால் கொடுக்கும் போது உடலுறவில் ஆர்வம் குறைவது பொதுவானது.சிலருக்கு இது மாதங்கள் வரை நீடிக்கலாம்.
இதற்கு காரணம் :
- உங்கள் ஹார்மோன் அளவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் (குறைந்த oestrogen அளவு)
- அதிகபடியான சோர்வு (குறைந்த தூக்கம், குழந்தையை தொடர்ந்து கவனித்து கொள்ள வேண்டிய நிர்பந்தம்)
- பிரசவத்தின்போது ஏற்பட்ட காயத்தால் ஏற்படும் வலி
- மற்றவையை விட உங்கள் குழந்தையை கவனிப்பதில் முன்னுரிமை
- உங்கள் உடலில்/உருவத்துடன் ஏற்படும் மாற்றங்கள்
இந்த சிக்கல்கள் காலப்போக்கில் சரியாகிவிடும்.
சிறு ஆலோசனைகள்
- முதலில் உங்கள் உடல் நிலை மற்றும் மனநிலை பற்றி உங்கள் கணவனிடம் பேசுங்கள்.
- இருவரும் ஒன்றாக ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குங்கள். இரண்டு மணி நேர தனிமை கூட வித்தியாசதை உருவாக்க முடியும்.இருவரும் உங்களுக்கு பிடித்த இடத்திற்கு தனிமையில் செல்லுங்கள் ..park,கடற்கரை. உங்கள் குழந்தையை என்னோருவரால் குறைந்தது பால் இல்லாமல் குழந்தையை பார்த்துக்கொள்ள முடியும் . குடும்பத்தாரிடம் பேசுங்கள். இது மனரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் .
- அடிக்கடி தொட்டுக்கொள்ளுங்கள் , கட்டி பிடியுங்கள் , அவ்வபோது முத்தம் கொடுங்கள் , அன்பை பரிமாறி கொள்ளுங்கள் ..
- உங்கள் அம்மா, நண்பர்களிடம் கேளுங்கள் , அவர்கள் இந்த மாதிரியான தருணத்தில் என்ன செய்தர்ர்கள் என்று..
- வலி இருந்தால் – lubrication பயன்படுத்தலாம்…
Leave a comment