எனக்கு கடந்த இரண்டு வருடங்களாக தாடை வலி வலித்து கொண்டிருக் கின்றது அதற்காக இருதயம் சம்பந்தப்பட்ட டாக்டரை சந்தித்து அனைத்து விதமான இருதய
பரிசோதனைகளும் செய்து விட்டேன் இருதய சம்பந்தமான எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று டாக்டர் சொல்லிவிட்டார்கள் இருப்பினும் தாடை வலி இருந்து கொண்டே தான் இருக்கின்றது பொதுவாகவே கடந்த இரண்டு வருடங்களாக மன பயம் அதிகமாக இருக்கின்றதுஇதற்கு நான் எந்த டாக்டரையும் சந்திக்க வேண்டும் என் பிரச்சினையை எந்த விதத்தில் சரி செய்து கொள்ள வேண்டும்
தாடை வலி சம்பந்தமாக
Share
நன்றி
நிச்சயமாக… கேளுங்கள்
வணக்கம் சார் நான் உங்கள் பதிலுக்காக காத்து கொண்டிருக்கிறேன்
வணக்கம் எனக்கு வயது 31 இரண்டு வருடங்களுக்கு முன்னாடி என்னுடைய இளைய மகள் குடல் ( mall rotation) ஆபரேஷன் செய்தேன் அதன் தொடர்ச்சியாக எனது மாமாவிற்கு பை பாஸ் சர்ஜரி என்னுடைய மைத்துனருக்கு கல்லடைப்பு ஆப்பரேஷன் இன்னொரு மாமாவிற்கு ஆஞ்சியோகிராம் தொடர்ச்சியாக மருத்துவமனையிலிருந்து அனைவரையும் பார்த்து கொண்டு இருந்தேன் அதன் சமயத்தில் தற்சமயம் கடந்த இரண்டு வருடங்களாக என் மனதில் மிகவும் பயம் ஏற்பட்டுள்ளது சின்ன தலைவலி என்றாலே சிடி ஸ்கேன் எடுத்தால் தான் எனக்கு நிம்மதியாக இருக்கின்றது நெஞ்சு எரிச்சல் என்றால் இசிஜி எடுத்துவிடவேண்டும் இப்படியாக கடந்த இரண்டு வருடங்களாக மருத்துவமனைக்கு என்று பல லட்சங்கள் செலவழித்து விட்டேன் என்னால் அந்த மன பயத்திலிருந்து வெளிவர முடியவில்லை உடல் எடையும் அதிகரித்து விட்டது எனது தூக்கத்திற்காக நான் மதுபானம் பழக ஆரம்பித்தேன் தற்சமயம் இப்பொழுது நிறுத்திவிட்டேன் மன பயம் இருந்தால் தாடை வலி வலிக்குமா நெஞ்சு எரிச்சலும் மிக அதிகமாக உள்ளது அதற்காக தாடை வலி வலிக்குமா மூச்சு விடுவதற்கு சிரமம் பெரு மூச்சு விடுகிற மாதிரி மனதிற்கு தோன்றுகிறது என்னால் இதிலிருந்து எப்படி வெளிவர வேண்டும்? நான் குணமாக என்ன செய்ய வேண்டும்? பல டாக்டர்களை நான் சந்தித்துள்ளேன் மனநல மருத்துவர் சந்தித்து உள்ளேன் ஆனால் எனக்கு திருப்தியாக இல்லை இப்பொழுது கடந்த 4 நாட்களாக ரத்தக் கொதிப்பும் ஆரம்பித்துவிட்டது என் மன நிலைமை எப்படி சரி செய்து கொள்வது நான் சரியாக என்ன செய்ய வேண்டும் என் நெஞ்சு எரிச்சல் தலைவலி இதற்கு நான் என்ன மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் தயவுசெய்து இதற்கு ஒரு நல்ல பதில் கூறும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
வணக்கம் ,
உங்கள் வயது ?
இரண்டு பக்க தாடையும் வலிகின்றதா அல்லது ஒரு பக்கம் மட்டுமா?
தொடர் வலி அல்லது விட்டு விட்டு வலி ?
சாப்பிடும் பொழுது வலி அதிகமாக இருக்கின்றதா ?
தாடையில் எதாவது வீக்கம்/கட்டி ?
தாடையை அழுத்தும் பொழுது வலி அதிகமாகின்றதா ?
உங்களுக்கு பல் சம்பந்தமான பிரச்சனை இருந்து இருக்கின்றதா ?
சில வேளைகளில் மட்டுமே இது இதயம் சம்பதமான பிரச்சையாக வாய்ப்பு உள்ளது . எனினும் நீங்கள் இருதய மருத்துவரை சந்தித்ததாக கூறியிருக்குறீர்கள். இனி பயப்பிடுவதர்க்கு ஒன்றும் இல்லை.
தாடை வலிக்கான பொதுவான காரணங்கள்
1.பல் பிரச்சினைகள் மற்றும் கோளாறுகள் ,
2. (Temporomandibular)டெம்போரோமாண்டிபுலர் மூட்டில் பிரச்சனை – உங்கள் கீழ் தாடை எலும்பை உங்கள் மண்டை ஓட்டையுடன் இணைக்கும் மூட்டு பிரச்சனை
நீங்கள் முதலில் ஒரு பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள் .
ஏதேனும் மேலும் சந்தேகம் இருப்பின் , தயக்கம் இன்றி கேட்கவும்
அருமையான விளக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது அதே சமயத்தில் என் மனதில் சில விஷயங்கள் கேட்கத் தோன்றுகின்றது கேட்கலாமா எனது மன நிலைமை பற்றி