எனக்கு 21 வயது ஆகிறது….
மூன்று மாதமாக விறைப்பு தன்மை குறைவாக இருக்கு.
உடல் பருமன் ஆகிவிட்டது….
காரணம் என்னவாக இருக்கும்???
அதிகாலையில் விறைப்பு இல்லை….
அஸ்வகந்தா பவுடர் 2 மாசமா குடிக்கிறேன் எந்த பயனும் இல்லை….
எனக்கு பயமா இருக்கு…..
எதாவது solution Sollunga Plzzz…
விறைக்க முடியாமை நிலை என்பது திருப்திகரமான பாலியல் செயல்திறனுக்கு போதுமானஅளவு ஆண்குறி விறைப்புத்தன்மையை அடைய மற்றும் நீட்டிக்க முடியாமையை குறிக்கின்றது.
ஆணின் பாலியல் தூண்டுதல் என்பது மூளை, ஹார்மோன்கள், உணர்ச்சிகள், நரம்புகள், தசைகள் மற்றும் இரத்த நாளங்களை உள்ளடக்கிய ஒரு சிக்கலான செயல்முறையாகும். இவற்றில் ஏதேனும் ஒரு பிரச்சினையால் விறைக்க முடியாமை நிலையை ஏற்படலாம். அதேபோல், மன அழுத்தம் மற்றும் மனநல கவலைகள் விறைக்க முடியாமை நிலையை ஏற்படுத்தலாம் அல்லது மோசமாக்கலாம்.
விறைக்க முடியாமைக்கு உடல் மற்றும் உளவியல் ரீதியான பல காரணங்கள் உண்டு.
விறைக்க முடியாமைக்கு ரீதியான உடல் காரணங்கள்
-ஆண்குறிக்குச் செல்லும் இரத்த நாளங்களின் குறுகல் – பொதுவாக உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு அல்லது நீரிழிவு நோயுடன் தொடர்புடையது
-ஹார்மோன் பிரச்சினைகள் – eg.டெஸ்டோஸ்டிரோன்
-அதிக எடை
-தண்டு வாட பிரச்சனைகள்
-குடிப்பழக்கம்
விறைக்க முடியாமைக்கு உளவியல் காரணங்கள்
-கவலை
-மனச்சோர்வு
-உறவு சிக்கல்கள்
விறைக்க முடியாமை நிலை சில சூழ்நிலைகளில் மட்டுமே நிகழ்கிறது. உதாரணமாக, சுயஇன்பத்தின் போது நீங்கள் ஒரு விறைப்புத்தன்மையைப் பெற முடிகின்றது , அல்லது தானாகவே நீங்கள் சில நேரங்களில் ஆண்குறி விறைப்புத்தன்மை அடைகின்றது , ஆனால் உங்கள் பாலியல் துணையுடன் விறைப்புத்தன்மையைப் பெற முடியவில்லை என்றால் விறைக்க முடியாமை நிலைக்கு அடிப்படை காரணம் உளவியல் (மன அழுத்தம் தொடர்பானது) ஆகும்.
எந்தவொரு சூழ்நிலையிலும் நீங்கள் விறைப்புத்தன்மையைப் பெற முடியாவிட்டால், அடிப்படைக் காரணம் உடல் ரீதியானதாக இருக்கலாம் .
நீங்கள் முதலில் நேரில் மருத்துவரை சந்திக்க வேண்டும். வெறுமனவே உங்களுக்கு விறைப்பு தன்மை இல்லை என்றவுடன் அதற்க்கான சிகிச்சை அளிக்க முடியாது. அது எதானால் ஏற்படுகின்றது என்று தெரிந்து கொள்ள வேண்டும் . மருந்து எடுப்பது எல்லாவற்றிக்கும் தீர்வாகாது. மருத்துவரை நேரில் சந்திப்பதன் மூலம், அவர் உங்களுடைய முழுமையான மருத்துவ விபரங்கள் மற்றும் அறிகுறிகளை கேட்ட கேட்டறிவார் . உடல் பரிசோதனைகளையும் செய்வார்.
தேவைப்பட்டால் உங்கள் ஆண்குறியின் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள பரிசோதனை,ஹார்மோன் பிரச்சினைகள் உதாரணமாக டெஸ்டோஸ்டிரோன் அளவு போன்றவற்றை தெரிந்து கொள்ள மேலும் பரிசோதனைகள் பரிந்துரைப்பார்.
அதன் பின்னரே உங்களுக்கு விறைக்க முடியாமை நிலை எதனால் ஏற்படுகின்றது என கண்டறிய முடியும். பின்பே அதற்க்கான மருந்துகளை பருந்துரைக்க முடியும்.உதாரணமாக டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவு என்றால் அதற்க்கான மருந்து , கொழுப்பு அதிகம் என்றால் அதற்க்கான மருந்து, எனவே காரணத்தை வைத்தே மருந்து எடுக்க வேண்டும்.
உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா ?
உடல் உறவு கொண்டு உள்ளீர்களா ?
உடல் உறவின் போது விறைப்பு அடைய வில்லையா ?
நீங்களாவே உங்களுக்கு விறைக்க முடியாமை நிலை உள்ளது என்று எண்ண வேண்டாம். சந்தேகம் இருந்தால் மருத்துவரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.உங்கள் மருத்துவர் உங்களுக்கு விறைக்க முடியாமை நிலை உள்ளது என்று கூறும் பட்டச்சதில் , அதன் பின் அதற்க்கான சிகிச்சை எடுக்கவும். வீண் கவலைகள் , யோசனைகளை வேண்டாம் அது நிலைமையை என்னும் மோசமாகும். எனவே நீங்களாகவே உங்களுக்கு விறைக்க முடியாமை நிலை உள்ளது என்று முடிவுக்கு வர வேண்டாம்.
உங்களுக்கு இளம் வயது , உடல் ரீதியான காரணங்கள் இருக்க வாய்ப்புகள் குறைவு. இதற்க்கு அடிப்படை காரணம் உளவியல் ரீதியாக இருக்கும், அதிகபடியாக இதை பற்றிய கவலை இதை மேலும் மோசமாகும். உங்களுக்கு உளவியல் ஆலோசனை மற்றும் உளவியல் சிகிச்சை உதவலாம்.
முதலில் நீங்கள் ஒரு பொது மருத்துவரை அல்லது urologist டை சந்திக்கவும்.
நன்றி