hi sir i am alagu enakku 25 age. enakku atikati kai kal nadunkuramari orumari thala suthuramari feeling ah irukku ennala oru mind ah irukka mudiyala pathadamave irukamati feel akuthu
கைகால் நடுக்கம் மற்றும் பதற்றம்
Share
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Sorry, you do not have a permission to ask a question, You must login to ask question.
hi sir i am alagu enakku 25 age. enakku atikati kai kal nadunkuramari orumari thala suthuramari feeling ah irukku ennala oru mind ah irukka mudiyala pathadamave irukamati feel akuthu
Necessary cookies are absolutely essential for the website to function properly. This category only includes cookies that ensures basic functionalities and security features of the website. These cookies do not store any personal information.
Any cookies that may not be particularly necessary for the website to function and is used specifically to collect user personal data via analytics, ads, other embedded contents are termed as non-necessary cookies. It is mandatory to procure user consent prior to running these cookies on your website.
வணக்கம்
உங்கள் வயது மற்றும் உங்கள் அறிகுறிகளை வைத்து பார்க்கும்பொழுது உங்களுக்கு இருப்பது மன பதற்றம் காரணமாக இருக்க வாய்ப்புள்ளது.மன பதற்றம் பற்றிய விளக்கம் .
சிலர் எப்போதாவது பதற்றமடைகின்றனர்; சிலர் எடுத்ததற்கெல்லாம் பதற்றமடைகின்றனர். ஆகமொத்தத்தில் இந்த பயம், பதற்றம் ஆகியவை நம்மை கீழே இழுக்கும் சக்திகளாகவே எப்போதும் உள்ளன. பயத்தையும் பதற்றத்தையும் பற்றி மருத்துவ ரீதியாக தெரிந்துகொண்டால், அதனைக் கடப்பது சுலபமாகும்
ஒருவருக்கு விருப்பமில்லாத, ஒவ்வாத, பயம் கலந்த அல்லது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அறிய முடியாத ஒரு செயலுக்கு உடல் மற்றும் மூளையின் ஒருங்கிணைந்த ஒருவித எதிர்வினைபாடுதான் மனப்பதற்றம்.
மன பதற்றம் ஏற்பட்டு அதுவே மன உளைச்சலுக்குத் தள்ளிவிடும். இறுதியில் மன அழுத்தம் உருவாகி ஒரு மனிதனின் உயிரையே பறித்துவிடும்.
மனப்பதற்றம் எதனால் வருகிறது?
குடும்ப வரலாறு
ஒருவருடைய குடும்பத்தில் யாருக்கேனும் மனநலப் பிரச்சனைகள் இருந்திருந்தால் அவர்களுக்குப் பதற்றப் பிரச்சனைகள் வரலாம்.
அழுத்தம் தரும் நிகழ்வுகள்
பணியிடத்தில் அழுத்தம், அன்புக்குரிய ஒருவருடைய மரணம், அல்லது தொந்தரவில் உள்ள உறவுகள் கூட பதற்றத்தின் அறிகுறிகளை உண்டாக்கலாம்.
உடல் நலப் பிரச்சனைகள்
தைராய்டு பிரச்சனைகள், ஆஸ்துமா, நீரிழிவு அல்லது இதய நோய் போன்ற நோய்களும் பதற்றத்தை உண்டாக்கக் கூடும். மன அழுத்தத்தினால் அவதிப்படுகிறவர்களும் பதற்றக் குறைபாட்டு அறிகுறிகளைப் பெறக் கூடும். உதாரணமாக, நீண்ட நாளாக மன அழுத்தத்தால் அவதிப்படும் ஒருவருடைய பணிச் செயல் திறன் குறையத் தொடங்கலாம், இதனால் பணித் தொடர்பான அழுத்தம் வந்து அதன் மூலம் பதற்றம் தூண்டப்படலாம்.
போதைப் பொருள்களைப் பயன்படுத்துதல்
போதைப் பொருள்கள், மது மற்றும் அது போன்ற பிற பொருள்களை அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு பதற்றம் தொடர்பான பிரச்சனைகள் வருகின்றன. இதற்குக் காரணம் அவர்கள் பயன்படுத்திய பொருள்களின் தாக்கம் குறையத் தொடங்குகிறது, அதனால் அவர்கள் பதற்றம் அடைகிறார்கள்.
ஆளுமைக் காரணிகள்
சில நேரங்களில் சில குறிப்பிட்ட ஆளுமைத் தன்மைகளைக் கொண்ட நபர்களுக்கு பதற்றம் தொடர்பான பிரச்சனைகள் வருகின்றன. உதாரணமாக எதிலும் கச்சிதமாக இருக்கவேண்டுமென்று நினைக்கிறவர்கள், எதையும் தாங்கள்தான் கட்டுப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறவர்கள்.
மனப்பதற்றத்தின் அறிகுறிகள்
மன பதட்டம் உங்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், நீங்கள் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்பதையும் பாதிக்கலாம்.
உடல் அறிகுறிகள்
வேகமான, ஒழுங்கற்ற அல்லது உங்களால் உணரக்கூடிய இதய துடிப்பு
தலைச்சுற்று மற்றும் மயக்கம் வருவது போன்ற உணர்வு
தலைவலி
நெஞ்சு வலி
பசியின்மை
வியர்த்தல்
மூச்சுத் திணறல் அல்லது வேகமாக சுவாசித்தல்
சூடாக உணர்வது
நடுக்கம்
திடீரென ஏற்படும் விரல்கள் அல்லது உதடுகளில் ஒரு கூச்ச உணர்வு
மன அறிகுறிகள்
பதற்றம்
பயம்
அமைதியற்ற நிலை
கடந்த காலம் அல்லது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவது
அழுகை
தூக்கமின்மை
கவனம் செலுத்த முடியாமை
மிக மோசமாக நடக்கும் என்ற பயம்
அதிர்ச்சிகரமான நினைவுகள்
வெறித்தனமான எண்ணங்கள்
நடத்தையில் மாற்றங்கள்
உங்கள் ஓய்வு நேரத்தை அனுபவிக்க முடியாமை
உங்களை கவனிப்பதில் சிரமம்
உறவுகளை உருவாக்க அல்லது பராமரிக்க முடியாமை
புதிய விஷயங்களை முயற்சிப்பதில் பயப்பிடுவது
பதட்டத்தை உருவாக்கும் இடங்களையும் சூழ்நிலைகளையும் தவிர்ப்பது
அடிக்கடி எல்லா விடயங்களையும் சரிபார்ப்பது
தீர்வுகள்
யோகா மற்றும் தியான பயிற்சி, சீரான உடற்பயிற்சி, உணவு முறையில் மாற்றங்கள், போதை பழக்கதை நிறுத்துதல், அதிக நேரம் மொபைல் மற்றும் சமூக வலைதளங்களில் நேரம் செலவிடுவதை குறைத்தல் போன்ற செயல்களால் நிச்சயம் மனப்பதற்றத்தை பெருமளவு குறைத்து மன அமைதி கொள்ளலாம்.
வீட்டிற்குள்ளேயே இருக்கிறோமே என நினைத்து ஒரு அறைக்குள்ளேயே பூட்டிக்கொள்ளாமல் வீட்டில் இருப்பவர்களுடன் அமர்ந்து பேசலாம், விளையாடலாம், வேலைகளில் உதவி செய்யலாம்.
பதற்றக் குறைபாடுகளைக் குணப்படுத்தலாம். அதே சமயம் பிரச்சனை எந்த அளவு தீவிரமானது என்பதைக் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. மேற்கண்ட அறிகுறிகளில் எவையேனும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் ஒரு நிபுணரைச் சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவது நல்லது. பதற்றக் குறைபாடுகளை மருந்துகளாலோ ஆலோசனையாலோ இவை இரண்டையும் கொண்டோ குணப்படுத்தலாம்.
than you sir